சின்னசேலம் அருகே ரெயில்வே கேட்டில் நின்றிருந்த லாரி பின்னோக்கி வந்ததால் விபத்து
- தோட்டப்பாடியில் இருந்து சின்னசேலத்திற்கு சென்று மீண்டும் தோட்டப்பா டிக்கு திரும்பி கொண்டிருந்தார்.
- மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு, தாயாருடன் எகிறி குதித்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தோட்டப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை (வயது 26). கூலி வேலை செய்து வருகிறார். இவர் தனது தாயாரை மோட்டார் சைக்கிளில் ஏற்றி க்கொண்டு தோட்டப்பாடியில் இருந்து சின்னசேலத்திற்கு சென்று மீண்டும் தோட்டப்பா டிக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது கூகையூர் செல்லும் சாலையில் ெரயில்வே கேட் அருகே சென்றார். அப்போது ரெயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. அங்கு நெல் மூட்டை ஏற்றிக்கொண்டு ரெயில்வே கேட்டில் நின்ற கொண்டிருந்த லாரி பின்னால் வந்தது.
லாரி ஓட்டுனர் பிரேக் போட முயற்சித்தும், லாரி நிற்காமல் பின்நோக்கி சென்றது. இதனைக் கண்ட சின்னதுரை, மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு, தாயாருடன் எகிறி குதித்தார். லாரியின் பின் சக்கரத்தில் மாட்டிய மோட்டார் சைக்கிள் நசுங்கி சேதமானது. எகிறி குதித்ததில் சின்னதுரையும், அவரது தாயாரும் லேசான காயங்களு டன் உயிர்தப்பினர். இது தொடர்பான புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.