உள்ளூர் செய்திகள்
தென்காசியில் தலையில் கல்லை போட்டு முதியவர் கொலை
- தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார்.
- கொலை செய்யப்பட்டவர் யார் என அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தென்காசி:
தென்காசி யானை படித்துறை அருகே 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
கொலை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தென்காசி போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற னர். அங்கு காவி வேட்டி அணிந்த முதியவர் ஒருவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அவர் தென்காசியில் உள்ள சில கோவில்களில் யாசகம் பெற்று வந்ததவர் என்பது தெரிய வந்தது. அவரின் தலையில் மர்ம நபர் யாரோ கல்லை போட்டு கொலை செய்துள்ளார். கொலை செய்யப்பட்டவர் யார் என அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மேலும் அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்?. அவரை யார் கொலை செய்தனர்? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.