உள்ளூர் செய்திகள்

சென்னையில் நடந்த ஃபெஸ்டிவல் ஆஃப் ஆஸ்திரேலியா நிகழ்ச்சி

Published On 2025-03-16 12:40 IST   |   Update On 2025-03-16 12:40:00 IST
  • கண்காட்சி கடந்த 14-ம் தேதி சென்னையில் தொடங்கியது.
  • மாணவர்கள், பெற்றோர்களுக்கு இந்த கண்காட்சி விலைமதிப்பற்ற வாய்ப்பை வழங்கியது.

ஆஸ்திரேலிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஆணையம் (Austrade) சார்பில் "ஃபெஸ்டிவல் ஆஃப் ஆஸ்திரேலியா"வின் இரண்டாம் கட்ட நிகழ்வு நடைபெற்றது. இது ஆஸ்திரேலியாவின் உலகத்தரம் வாய்ந்த கல்வி மற்றும் பிரீமியம் உணவு, பான தயாரிப்புகளைக் கொண்டாடும் கண்காட்சியாகும். இந்த கண்காட்சி கடந்த 14-ம் தேதி சென்னையில் தொடங்கியது.

அதன்பிறகு இந்த விழா புனே (மார்ச் 16), அகமதாபாத் (மார்ச் 20) மற்றும் டெல்லி (மார்ச் 22) ஆகிய நகரங்களிலும் நடைபெற உள்ளது.

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகளுடன் நேரடியாக உரையாடவும், அவர்களின் கல்வி மற்றும் தொழில் விருப்பங்களை ஆதரிக்கும் வகையில் கல்வித் திட்டங்களை ஆராயவும் இந்திய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இந்த சென்னை கண்காட்சி ஒரு விலைமதிப்பற்ற வாய்ப்பை வழங்கியது.

ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான கல்வி உறவுகள் பல ஆண்டுகளாக ஆழமடைந்துள்ளன. வளர்ந்து வரும் வலுவான பொருளாதார மற்றும் கலாச்சார தொடர்புகளை வளர்க்கின்றன. ஃபெஸ்டிவல் ஆஃப் ஆஸ்திரேலியா இந்தியாவில் ஆஸ்திரேலியாவின் இருப்பை வலுப்படுத்துகிறது. 

Tags:    

Similar News