உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த அங்கன்வாடி ஊழியர் சாவு
- அங்கன் வாடியில் அமுதலட்சுமி பணியாற்றி வந்தார்.
- காயமடைந்த அமுத லட்சுமியை அருகில் இருந்த தனியார் மருத்துவமனை யில் அனுமதித்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பெரிய குறுக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 55). இவரது மனைவி அமுதலட்சுமி (52). கடந்த 30 ஆண்டுகளாக அதே கிராமத்தில் அங்கன் வாடியில் அமுதலட்சுமி பணியாற்றி வந்தார். இந்நிலையில் அங்கன் வாடி தொடர்பான பணிக் காக உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவல கத்திற்கு தனது கணவ ருடன் அமுதலட்சுமி மோட் டார் சைக்கிளில் சென்றார். அப்போது எலவனாசூர் கோட்டை அருகில் இருந்த டீக்கடையில் டீ குடிப்ப தற்காக மோட்டார் சைக்கி ளை நிறுத்தினர்.
அமுதலட்சுமிக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப் பட்டிருந்ததால், மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கும் போது, நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் காயமடைந்த அமுத லட்சுமியை அருகில் இருந்த தனியார் மருத்துவமனை யில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக் காக புதுவை மகாத்மா காந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்த னர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அமுதலட்சுமி பரிதாபமாக நேற்று உயிர் இழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் எலவனா சூர் கோட்டை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.