உள்ளூர் செய்திகள்
கடையநல்லூர் அருகே கோவில் கும்பாபிஷேக விழாவில் அன்னதானம்
- காளியம்மன் கோவிலுக்கு கோபுரம் அமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
- விழாவில் அய்யாத்துரைப் பாண்டியன் அன்னதானம் ஏற்பாடு செய்து அதனை தொடங்கி வைத்தார்.
தென்காசி:
கடையநல்லூர் அருகே உள்ள பால அருணாசலபுரம் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோவிலுக்கு கோபுரம் அமைத்து கொடுக்கப்பட்டு அதன் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு அ.தி.மு.க. நிர்வாகியும், தொழில் அதிபருமான அய்யாத்துரைப் பாண்டியன் அன்னதானம் ஏற்பாடு செய்து அதனை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊத்துமலை இளைய ஜமீன் குமரேசராஜா, பழனிச்சாமி, பூலோகராஜ், சுபிக்ஷா கருப்பசாமி, பண்பொழி கவுன்சிலர் கணேசன், பேச்சிமுத்து ஆனந்த், செல்வராஜ் மற்றும் பால அருணாசலபுரம் தேவேந்திர குல வேளாளர் நாட்டாண்மைகள் மாதவன், மகேஷ் மற்றும் கணேசன், மாடசாமி, ஆறுமுகசாமி, வேல்முருகன், மகேஷ், சாமி மாரிமுத்து, வேல்ராஜ், முத்துக்குமார், சாமித்துரை, கண்ணன், அரவிந்த் மற்றும் ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.