உள்ளூர் செய்திகள்
- பேரணியில் பள்ளி மாணவர்கள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- கண்டியூர் கடைவீதியில் ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்ட்டது.
திருவையாறு:
திருவையாறு அருகே கண்டியூர் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இப்பேரணிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபாலன் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் நந்தினி, ஜான் கென்னடி ஆகியோர் முன்னிலை வைத்தனர். பேரணியை ஒன்றிய குழு தலைவர் அரசாபகரன் தொடங்கி வைத்தார்.
பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஆசிரியர்கள், ஊராட்சி செயலாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பேரணி கண்டியூர் கடைவீதியில் ஊர்வலமாக சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்ட்டது. முடிவில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சையது முபாரக் நன்றி கூறினார்.