தமிழ்நாடு

தமிழ் இனத்தின் பெருமை, வரலாறு உலகெங்கும் கொடி கட்டி பறக்கட்டும்- அமைச்சர் தங்கம் தென்னரசு

Published On 2025-02-02 12:28 IST   |   Update On 2025-02-02 12:28:00 IST
  • 'தி நியூயார்க் டைம்ஸ்' இதழ் கட்டுரை ஒன்றினை வெளியிட்டிருப்பதில் பெருமகிழ்வு.
  • அத்தகைய முயற்சிகளை அறிவியலின் துணைக் கொண்டு முறியடித்து வெற்றிநடைப் போட்டுக் கொண்டிருக்கிறார் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னை:

சிந்துவெளி எழுத்து முறையை தெளிவாக புரிந்துகொள்ள வழிவகை செய்வோருக்கு 1 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

இதனை பாராட்டி அமெரிக்காவின் 'தி நியூயார்க் டைம்ஸ்' நாளிதழ் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வெண்கலக் கால (Bronze Age: 2,000BC to 700 BC) நாகரிகத்துக்கு பின்நோக்கி சென்று ஆரிய- திராவிட கலாச்சார போரை முடிவுக்கு கொண்டு வரும் பெரும் முயற்சி என்று தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஒரு இனத்தின் வரலாற்றைத் துடைத்தெறிய வேண்டுமெனில் அதன் கலாச்சாரத்தை அழித்துவிட்டால் போதும். அத்தகைய முயற்சிகளை அறிவியலின் துணைக் கொண்டு முறியடித்து வெற்றிநடைப் போட்டுக் கொண்டிருக்கிறார் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதனை அங்கீகரிக்கும் வகையில் புகழ்பெற்ற 'தி நியூயார்க் டைம்ஸ்' இதழ் கட்டுரை ஒன்றினை வெளியிட்டிருப்பதில் பெருமகிழ்வு.

தமிழ் இனத்தின் பெருமையும், வரலாறும் உலகெங்கும் கொடி கட்டி பறக்கட்டும்! என தெரிவித்துள்ளார். 



Tags:    

Similar News