தமிழ்நாடு
தமிழக உரிமையை தாரை வார்க்கக்கூடாது- ராமதாஸ்
- தமிழ்நாட்டு உழவர்களுக்கு திமுக அரசு இழைக்கும் பெரும் துரோகம் ஆகும்.
- இது உழவர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்கள் தவிர மீதமுள்ள மாவட்டங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நெல் கொள்முதல் செய்யப்படாது என்றும், அந்த மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்யப்படும் அதிகாரம் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இது தமிழ்நாட்டு உழவர்களுக்கு திமுக அரசு இழைக்கும் பெரும் துரோகம் ஆகும். இது உழவர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். மாநில அரசின் உரிமைகளையும், உழவர்களின் நலன்களையும் மத்திய அரசிடம் தாரை வார்த்திருக்கக் கூடாது.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.