தமிழ்நாடு
பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் மயிலாப்பூர் அ.தி.மு.க. பிரமுகர் கைது
- புகாரின் பேரில் மயிலாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சாமிநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- சாமிநாதன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை:
சென்னை மயிலாப்பூர் நொச்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன். அ.தி.மு.க. நிர்வாகியான இவர் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வேறு ஒருவரின் சைக்கிளை மாற்றி எடுத்துச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் சாமிநாதனிடம் சென்று கேட்டு உள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் அவர் இரண்டு பெண்களில் ஒருவரை கீழே தள்ளி மானபங்கம் செய்ததாக தெரிகிறது.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மயிலாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சாமிநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.