null
விஜய் Invisible-ஆ இருந்து ஒரு வருஷம் ஆகிவிட்டதா? தமிழிசை சவுந்தரராஜன்
- கட்சியின் கொடியை தலைவர் விஜய் ஏற்றினார்.
- தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி அறிவிக்கப்பட்டு இன்றோடு ஓராண்டு நிறைவுற்றது. இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், த.வெ.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் கொடியை தலைவர் விஜய் ஏற்றினார்.
இதைத் தொடர்ந்து தலைமை அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள த.வெ.க. கொள்கை தலைவர்களின் சிலைகளை த.வெ.க. தலைவர் விஜய் திறந்து வைத்து மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். த.வெ.க. 2-ம் ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி கட்சி தொண்டர்கள் மற்றும் நடகர் விஜயின் ரசிகர்கள் வாழ்த்து கூறி கொண்டாடி வருகின்றனர்.
மேலும், அரசியல் தலைவர்களும் த.வெ.க. 2-ம் ஆண்டு தொடக்க விழா குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த தெலுங்கானா மற்றும் புதுச்சேரி முன்னாள் ஆளுநரும், தமிழ்நாடு பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் த.வெ.க. குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
அப்போது, "இன்றோடு ஒரு வருஷம் ஆகுதா? Invisible-ஆ இருந்து ஒரு வருஷம் ஆகிவிட்டதா? Visible-ஆ வந்து எவ்வளவு வருஷம் என்று தெரியவில்லை. அவர் திரையில் Visible-ஆ இருக்கிறார், அவரது ரசிகர்கள் கோபித்து கொள்ளக் கூடாது. அவர் களத்திற்கு வந்து மக்கள் பணியாற்றியானல் மகிழ்ச்சி."
"ஒவ்வொருத்தருக்கும் ஒரு பாணி உண்டு. அதுபோல விஜய், தொலைநோக்கில் தான் அரசியல் செய்ய வேண்டும். Work From Home மற்றும் இணையதளத்தில் தான் பணி செய்யவேண்டும் என்று நினைத்தால் எதுவும் செய்ய முடியாது. மக்களோடு மக்களாக பழகும் தலைவர்களே சரியான தலைவர்கள் என நினைக்கிறோம். அதனை விஜய் முடிவு செய்யட்டும்," என்று கூறினார்.