உள்ளூர் செய்திகள்

சேலம் மேற்கு கோட்டம் சார்பில் அஞ்சல் முகவர் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Published On 2022-06-09 09:35 GMT   |   Update On 2022-06-09 09:35 GMT
சேலம் மேற்கு கோட்டம் சார்பில் அஞ்சல் முகவர் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்பட்டன.

சேலம்:

சேலம் அஞ்சல் மேற்கு கோட்டத்தில் வருகிற 14-ம் தேதி காலை 11 மணி முதல் 2 மணி வரை பி.எல்.ஐ., ஆர்.பி.எல்.ஐ. நேரடி முகவர் தேர்விற்கான நேர்காணல் நடைபெற உள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் வருகிற 14-ந்தேதி சேலம் மேற்கு கோட்ட அலுவலகத்தில் தங்களின் வயது சான்றிதழ், கல்வி சான்றிதழ் மற்றும் முழு விபரங்களுடன் கலந்து கொள்ளலாம்.

நேர்முக தேர்விற்கான அடிப்படை தகுதிகள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது முதல் 50 வயது வரை மட்டும் உள்ளவர்கள் கலந்து கொள்ள வேண்டும். ஆயுள் காப்பீட்டின் முன்னாள் முகவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், முன்னாள் படை வீரர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், சுய தொழில் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் தகுதி உள்ள அனைவரும் பங்கேற்கலாம்.

ஆயுள் காப்பீடு திட்டத்தில் முன் அனுபவம் இருந்தால் வரவேற்கத்தக்கது. மேற்கண்ட தகுதியினை பூர்த்தி செய்தவர்கள் தங்களது வயது சான்றிதழ், கல்வி சான்றிதழ், ஆதார் நகல் ஆகியவற்றுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ஒரு பாஸ்போர்ட் அளவு போட்டோ இவை அனைத்தையும் வருகிற 14-ந்தேதிக்குள் கோட்ட கண்காணிப்பாளர் சேலம் மேற்கு கோட்டம் சேலம் -636005 என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

முகவர் நியமனம் இலக்கா விதிகளுக்கு உட்பட்டு நடைபெறும். அஞ்சல் கண்காணிப்பாளர் முடிவே இறுதியானது. இந்த தகவலை சேலம் மேற்கு கோட்டம் அஞ்சல் அலுவலக கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தெரிவித்து–உள்ளார்.

Tags:    

Similar News