உள்ளூர் செய்திகள்
ஆஷா பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்
- ஆஷா பணியாளர்களுக்கு மாதந்தோறும் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 21 ஆயிரம் வழங்க வேண்டும்.
- ஆஷா பணியாளர் களிடம் பிடித்தம் செய்யப்பட்ட காப்பீடு தொகையினை திரும்ப வழங்க வேண்டும்.
அரூர்,
தருமபுரி மாவட்டம் ஏஐடியுசி ஆஷா பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சங்க ஒன்றியத் தலைவர் உத்ரா தலைமையில் அரூரில் நடைபெற்றது.
இதில் ஆஷா பணியாளர்களுக்கு மாதந்தோறும் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 21 ஆயிரம் வழங்க வேண்டும். ஆஷா பணியாளர் களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஆஷா பணியாளர் களிடம் பிடித்தம் செய்யப்பட்ட காப்பீடு தொகையினை திரும்ப வழங்க வேண்டும்.
அரசு சார்பில் ஆஷா பணியாளர்களுக்கு சீருடைகள், காலணி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், சங்க மாவட்டத் தலைவர் முருகன், மாவட்ட பொதுச் செயலர் கே.மணி, கவிஞர் ரவீந்திரபாரதி, சங்க நிர்வாகிகள் ராதா, கிருஷ்ணவேணி, சக்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.