உள்ளூர் செய்திகள்
பாளையில் வீடு அருகே மது குடித்ததை தட்டிக் கேட்டவர் மீது தாக்குதல்- 2 வாலிபர்கள் கைது
- பாலாஜி,துரைப்பாண்டி ஆகியோர் மது குடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
- ஆத்திரமடைந்த இருவரும் சுந்தரராஜனை தாக்கி கீழே தள்ளி விட்டுள்ளனர்.
நெல்லை:
பாளை ரெட்டியார்பட்டி ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் சுந்தரராஜன் (வயது 38), தொழிலாளி. இவரது வீட்டின் அருகே தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாலாஜி (26) மற்றும் துரைப்பாண்டி (24) ஆகிய இருவரும் சேர்ந்து மது குடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை சுந்தரராஜன் தட்டிக் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி, துரைப்பாண்டி ஆகிய இருவரும் சுந்தரராஜனை தாக்கி கீழே தள்ளி விட்டுள்ளனர்.
இது தொடர்பாக அவர் பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாட்ஷா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.