உள்ளூர் செய்திகள்
உளுந்தூர்பேட்டையில் பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய வாலிபர் கைது
- தலைமறைவாகியுள்ள பூமிநாதனை தேடி வருகின்றனர்
- உளுந்தூர்பேட்டை போலீசார் அஜயை கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் வரிசையில் வரச் சொன்ன விற்பனையாளர் ராமர் என்பவர் மீது இரண்டு வாலிபர்கள் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தினர். இது தொடர்பான புகாரின் பேரில், சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், வாலிபர்களை அடையாளம் கண்டனர். அதன்படி, உளுந்தாண்டவர் கோவில் காலனியை சேர்ந்த அஜய் (வயது 32), செங்குறிச்சியை சேர்ந்த பூமிநாதன் (20) தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து விரைந்து சென்ற உளுந்தூர்பேட்டை போலீசார் அஜயை கைது செய்தனர். மேலும், தலைமறைவாகியுள்ள பூமிநாதனை தேடி வருகின்றனர்.