மர்மநோய் தாக்குதலால் அவக்கோடா மர இலைகள் கருகி உள்ளது.
கொடைக்கானலில் மர்மநோய் தாக்குதலால் அவக்கோடா விவசாயம் பாதிப்பு
- கொடைக்கானல் மலை ப்பகுதியில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது.இங்கு பல்வேறு காய்கறிகள் மட்டுமின்றி பழ வகைகளும் விவசாயம் செய்து வருகின்ற னர்.
- கால நிலை மாற்றத்தின் காரணமாகவும், வேர் புழு தாக்கத்தின் காரணமாவும் மரங்களில் மர்ம நோய் தாக்கி முற்றிலுமாக அவக்கோடா விவசாயம் பாதிக்க ப்பட்டுள்ளது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மலை ப்பகுதியில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது.இங்கு பல்வேறு காய்கறிகள் மட்டுமின்றி பழ வகைகளும் விவசாயம் செய்து வருகின்ற னர்.
தொடர்ந்து மலைக்கி ராமங்களான வில்பட்டி, பள்ளங்கி, புலியூர், பெரு மாள்மலை, பேத்துப்பாறை மற்றும் பண்ணைக்காடு, தாண்டிக்குடி உள்ளிட்ட இடங்களில் அவக்கோடா என்று அழைக்கப்படும் வெண்ணெய்ப் பழ விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது கால நிலை மாற்றத்தின் காரணமாகவும், வேர் புழு தாக்கத்தின் காரணமாவும் மரங்களில் மர்ம நோய் தாக்கி முற்றிலுமாக அவக்கோடா விவசாயம் பாதிக்க ப்பட்டுள்ளது.
இதனை நம்பி உள்ள விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். இதனை தடுக்க தோட்டக்கலைதுறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரு மரத்தில் ஒரு வருடத்திற்கு 1 முதல் 3 டன் வரை காய்கள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவக்கோடா பழங்களின் உற்பத்தி குறைந்துள்ளதால் பராமரிப்புச் செலவுக்கு கூட பணம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்து ள்ளனர்.