உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்ட காட்சி.

நிலக்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

Published On 2022-09-09 04:31 GMT   |   Update On 2022-09-09 04:31 GMT
  • வத்தலக்குண்டு கல்வி மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் காந்திகிராமம் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
  • இதில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.

நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு கல்வி மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் காந்திகிராமம் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது.

நிலக்கோட்டை நாடார் உயர்நிலைப் பள்ளி மாணவிகள் தடகளப் போட்டியில் பெண்கள் பிரிவில் கலந்து வத்தலக்குண்டு கல்வி மாவட்ட அளவில் முதல் இடம் பெற்று வெற்றி பெற்றனர். இதுபோன்று பல்வேறு தடகளப் போட்டியில் மாணவர்களும் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றனர்.

இந்த மாணவ-மாணவிகளை பாராட்டி நிலக்கோட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் சுசீந்திரன் பரிசுகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி செயலர் வினேஷ் பிரபு, பள்ளி தலைமையாசிரியர் சீதாலட்சுமி, உடற்கல்வி ஆசிரியர் சபரி மற்றும் பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News