போட்டியில் வென்ற குழந்தைகளுக்கு சான்றிதழ் வழங்கல்
- 2 முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 3 சக்கர சைக்கிள் போட்டி நடைபெற்றது.
- 2,3,4,5-ம் இடங்களை பிடித்த குழந்தைகளுக்கு வெள்ளி பதக்கம் பரிசாக வழங்கப்பட்டது.
சுவாமிமலை:
கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் 2 முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 3 சக்கர சைக்கிள் போட்டி நடைபெற்றது.
போட்டியில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர்.
போட்டியானது 3 நிலைகளாக நடைபெற்றது.
போட்டியில் முதல் இடம் பிடித்த குழந்தைக்கு தங்க பதக்கமும், முறையே 2,3,4,5-ம் இடங்களை பிடித்த குழந்தைகளுக்கு வெள்ளி பதக்கமும் பரிசாக வழங்கப்பட்டது.
விழாவில் கார்த்தி வித்யாலயா பள்ளி தலைவர் கார்த்திகேயன் கலந்து கொண்டு வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
மேலும், கலந்து கொண்ட அனைத்து குழந்தை களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இதுகுறித்து பன்னாட்டு பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் கூறுகையில்:-
போட்டியானது குழந்தைகளை ஊக்கு விக்கும் வகையிலும், புத்துணர்ச்சி அளிக்கும் விதமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்றார்.
முன்னதாக பள்ளி முதல்வர் அம்பிகாபதி அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.