உள்ளூர் செய்திகள்
கோத்தகிரி அருகே பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
- போதைபொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- மாணவ, மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்.
அரவேணு:
கோத்தகிரி அருகே குஞ்சப்பனையில் அரசு உண்டு உறைவிட பள்ளி உள்ளது.
இந்த பள்ளியில் போதைபொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் வினுதாஸ் அனைவரையும் வரவேற்றார்.
கோத்தகிரி இன்ஸ்பெக்டர் சண்முகவேல், போக்சோ மற்றும் போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறினார். இதில் போலீஸ்காரர்கள் ரமேஷ் ஜேக்கப், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் காஞ்சனா நன்றி கூறினார்.