சென்னையில் நடைபெற்ற இளம் எழுத்தாளர்களின் நூல் வெளியீட்டு விழா
- சென்னையில் இளம் எழுத்தாளர்கள் 15 பேர் எழுதிய புத்தகங்கள் ஒரே மேடையில் வெளியிடப்பட்டது.
- இளம் எழுத்தாளர்களை உருவாக்கும் வகையிலும் ரைட்டத்தான் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இளம் எழுத்தாளர்கள் 15 பேர் எழுதிய புத்தகங்கள் ஒரே மேடையில் வெளியிடப்பட்டது. இளம் வயது எழுத்தாளர்களை உருவாக்கும் நோக்கில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும், இளம் எழுத்தாளர்களை வளர்ப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாகவும், இளம் எழுத்தாளர்களை உருவாக்கும் வகையிலும் ரைட்டத்தான் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில், ரைட்டத்தான் (Writathon) என்ற படைப்பு எழுத்துப் போட்டியை லேர்னர்ஸ் சர்க்கிள் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் 8 முதல் 18 வயது வரையிலான குழந்தைகள் பங்கேற்கலாம்.
இந்த போட்டி, அனைத்து வகைகளிலும் கவிதை, சிறுகதை மற்றும் குறுநாவல் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க இளம் எழுத்தாளர்களை அழைக்கிறது. ரூ. 20,000 மதிப்புள்ள ரொக்கப் பரிசுகளுடனும், 10+ பங்கேற்பாளர்கள் உள்ள பள்ளிகளுக்கான மதிப்புமிக்க பள்ளி ஊக்கப் பரிசுடனும், வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த இந்த ரைட்டத்தான் போட்டி ஒரு பொன்னான வாய்ப்பாகும்.