சாதிவாரி கணக்கெடுப்பு: நாம் தமிழர் கட்சி சார்பில் 16-ந்தேதி பேரணி
- சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தமிழ்நாடு அரசு கூறி வருகிறது.
- சீமான் தலைமையில் செங்கல்பட்டில் பிற்பகல் 4 மணிக்கு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலமான தெலங்கானா சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி முடித்தது மட்டுமின்றி, அதனடிப்படையில் அம்மாநிலத்தின் இட ஒதுக்கீட்டின் அளவை இப்போதுள்ள 50 விழுக்காட்டில் இருந்து 66 விழுக்காடாக உயர்த்த முடிவு செய்து அதற்கான சட்டத் திருத்த முன்வரைவை அடுத்த மாதம் முதல் வாரத்தில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்ற முடிவு செய்திருக்கிறது. அதேநேரம், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தமிழ்நாடு அரசு கூறி வருகிறது.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துமாறு தமிழக அரசை வலியுறுத்தி 16-ந்தேதி செங்கல்பட்டில் பேரணி நடைபெறும் என்று நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.
கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் செங்கல்பட்டில் பிற்பகல் 4 மணிக்கு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.