தமிழ்நாடு

கரும்புக்கான கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.3,151 நிர்ணயம்- தமிழ்நாடு அரசு

Published On 2025-03-04 14:14 IST   |   Update On 2025-03-04 14:14:00 IST
  • 9.50 சதவீதம் அல்லது அதற்கும் குறைவான சர்க்கரை திறன் கொண்ட ஒரு டன் கரும்பி விலை ரூ.3,151 ஆக நிர்ணயம்.
  • 10.65 சதவீத சர்க்கரை திறன் கொண்ட கரும்புக்கு ரூ.3,532.80 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை:

கரும்புக்கான கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.3,151 நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 2024-25-ம் ஆண்டு பருவத்திற்கு கொள்முதல் விலையை நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

9.50 சதவீதம் அல்லது அதற்கும் குறைவான சர்க்கரை திறன் கொண்ட ஒரு டன் கரும்பி விலை ரூ.3,151 ஆகவும், 9.85 சதவீத சர்க்கரை திறன் கொண்ட கரும்புக்கு ரூ.3,267 ஆகவும், 10.10 சதவீத சர்க்கரை திறன் கொண்ட கரும்புக்கு ரூ.3,344.20 ஆகவும், 10.65 சதவீத சர்க்கரை திறன் கொண்ட கரும்புக்கு ரூ.3,532.80 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News