உள்ளூர் செய்திகள்
தடையை மீறி பட்டாசு வெடித்த 21 பேர் மீது வழக்கு
- பட்டாசுகளை வெடித்தும், இனிப்பு சாப்பிட்டும் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
- அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடிக்கப்படுகிறதா? என்று போலீசார் கண்காணித்து வந்தனர்.
சேலம்:
தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பண்டிகையையொட்டி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்தும், இனிப்பு சாப்பிட்டும் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதற்கிடையே காலை 6 மணி முதல் 7 மணி வ ரையும், மாலை 7 மணி முதல் இரவு 8 மணி வரையும் என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழக அரசு சார்பில் அனுமதி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடிக்கப்படுகிறதா? என்று போலீசார் கண்காணித்து வந்தனர்.
தொடர்ந்து சேலம் புறநகர் பகுதிகளில் அனுமதித்த நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்ததாக 19 பேர் மீதும், மாநகரில் 2 பேர் மீதும் என மொத்தம் 21 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.