உள்ளூர் செய்திகள்
மரக்காணம் அருகே தனியார் ஊழியரிடம் செல்போன் பறிப்பு
- நித்தியநாதன் நேற்று இரவு வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஓபிபேர் கிராமத்திற்கு சென்றுள்ளார் .
- 2 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி விட்டு நித்திய நாதனிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
விழுப்புரம்:
மரக்காணம் அருகே ஓமிபேர் கிராமத்தைச் சேர்ந்தவர் நித்திய நாதன் (வயது23). இவர் புதுவை மாநிலம் காலாப்பட்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஓபிபேர் கிராமத்திற்கு சென்றுள்ளார் .
அப்போது இவரது கிராமத்தின் அருகில் உள்ள கோட்டி குப்பம் சாலையில் 2 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி விட்டு நித்திய நாதனிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். நித்தியநாதன் மரக்காணம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்கள் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.