உள்ளூர் செய்திகள்
- கரூரில் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா பறிமுதல்
- செம்மலர் (49) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலாயுதம்பாளையம்
கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பா ன்மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் மற்றும் புகையிலை பொ ருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வேலாயுதம்பாளையம் போ லீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று சோதனை செய்த போது அங்கு பான் மசாலா, குட்கா, புகையிலை பொ ருட்களை விற்பனை செய்வது தெரியவந்தது. இத்னையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் விற்பனை செய்த புன்னம் சத்திரம் ஆர்.ஜி.நகர் பகுதியைச் சேர்ந்த செம்மலர் (49) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.