உள்ளூர் செய்திகள்
சங்கராபுரத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
- சங்கராபுரத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- இதயதுல்லா, பொதுக் குழு உறுப்பினர் துரைராஜ் முன்னிலையில் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் கேலிச் சித்திரமாக 10 தலை ராவணன் அவதாரத்தில் ராகுல் காந்தியை வரைந்து லட்சகணக்கான பாரதீய ஜனதாசமூக வலைதள குழுக்களில் வாயிலாக வெளியிட்டு வெறுப்பு பிரச்சாரத்தை செய்யும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமையில் , பேரூராட்சி துணைத் தலைவர் ஆஷா பி ஜாகீர், மாவட்ட துணைத் தலைவர் இதயதுல்லா, பொதுக் குழு உறுப்பினர் துரைராஜ் முன்னிலையில் நடைபெற்றது. நகரத் தலைவர்வக்கீல் முகமது பாஷா வரவேற்றார். மாணவர் காங்கிரஸ் மாநில செயலாளர் அதில் கான் தலைமையில் கண்டன உரையாற்றி எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர்.