உள்ளூர் செய்திகள்
ஆலங்குளம் அருகே காங்கிரஸ் சார்பில் ஆலோசனை கூட்டம்
- வருகிற 18-ந் தேதி ராகுல் காந்தி பிறந்த நாளை மிக சிறப்பாக கொண்டாட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- ஆலோசனை கூட்டமானது வட்டார தலைவர் ஹரி நாராயணன் தலைமையில் நடைபெற்றது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே ராம் நகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பாப்பாக்குடி வட்டார தலைவர் ஹரி நாராயணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆலங்குளத்தில் வருகிற 18-ந் தேதி ராகுல் காந்தி பிறந்த நாளை மிக சிறப்பாக கொண்டாட வேண்டும், இதில் முன்னாள் எம்.பி.க்கள் ராமசுப்பு, தனுஷ்கோடி ஆதித்தன், வேல்துரை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் பாப்பாக்குடி நகர தலைவர் ஆறுமுக பூபதி, திலகராஜ், தங்கராஜ், செல்வராஜ், பால்பாண்டி, ஜெயபால், பரமசிவம், புலவர் சுரேஷ்ரேவதி, கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.