உள்ளூர் செய்திகள்

பேரூராட்சியில் வெளிநடப்பு செய்த கவுன்சிலர்களை படத்தில் காணலாம்.

தாமரைக்குளம் பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு

Published On 2022-08-31 10:34 IST   |   Update On 2022-08-31 10:34:00 IST
  • தாமரைக்குளம் பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.
  • கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்ததால் பேரூராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பெரியகுளம்:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் பால்பாண்டி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மலர்கொடி சேதுராமன், செயல் அலுவலர் ஆளவந்தான் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தாமரைக்குளம் பேரூராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது, குடிநீர் தொட்டிகள் அமைப்பது, சாலை வசதிகளை விரிவாக்கம் செய்வது, பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என்று தீர்மானங்களை வாசித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென பேரூராட்சி கவுன்சிலர்கள் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து 1வது வார்டு வசந்தா, 3வது வார்டு முருகன், 5வது வார்டு பாண்டி, 6வது வார்டு மைதிலி அன்பழகன், 7வது வார்டு சாந்தி, 10வது வார்டு ஜாகிர்உசேன் உள்ளிட்ட 6 உறுப்பினர்கள் தங்களது பகுதிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரவில்லை என்றும், வார்டு உறுப்பினர்களுக்கு தெரியாமல் நிகழ்ச்சிகள் நடைபெறுவதாகவும், செயல் அலுவலர் மோசடி செய்து முறைகேட்டில் ஈடுபடுவதாகவும், தன்னிச்சையாக செயல்படுவதாகவும் கூறி வெளிநடப்பு செய்தனர்.

கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்ததால் பேரூராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News