உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம்

Published On 2023-05-21 10:13 GMT   |   Update On 2023-05-21 10:13 GMT
  • தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்.
  • கள்ளச்சாராய காய்ச்சி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிருஷ்ணகிரி,

தமிழகத்தில் கள்ளச்சாராய உயிரிழப்புகளை கண்டித்து, கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணாசிலை எதிரே, பாஜக மகளிரணி சார்பில், கள்ளச்சாராய உயிரிழப்புகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிழக்கு மாவட்ட மகளிரணி தலைவி விமலா தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட தலைவி மஞ்சுளா, ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர்கள் சிவபிரகாசம், நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில மகளிரணி தலைவர் உமாரதிராஜன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும். கள்ளச்சாராய காய்ச்சி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மூழக்கங்கள் எழுப்பினர்.

இதில், மாவட்ட துணை பொது செயலாளர்கள் மீசைஅர்ஜூனன், கோவிந்தராஜ், கவியரசு, மகளிரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மகளிரணி மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

Tags:    

Similar News