உள்ளூர் செய்திகள்

தருமபுரி பேருந்து நிலையத்தில் பயணியர் நிழற்கூடம் அமைக்கும் பணி

Published On 2023-03-18 14:52 IST   |   Update On 2023-03-18 14:52:00 IST
  • பூக்கடை வியாபாரிகள் உள்ளிட்டோர் வெயில் மற்றும் மழைக்கு ஒதுங்க இடமின்றி அவதியுறும் நிலை உள்ளன.
  • பயணியர் நிழற்கூடை அமைக்க தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் நிதியை ஒதுக்கீடு செய்து, அடிக்கல் நாட்டி, பணியை தொடங்கி வைத்தார்.

தருமபுரி,

தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் பயணியர் நிழற்கூடம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அமைக்காத காரணத்தால் அப்பகுதியில் அதிக நேரம் காத்திருந்து பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள், பூக்கடை வியாபாரிகள் உள்ளிட்டோர் வெயில் மற்றும் மழைக்கு ஒதுங்க இடமின்றி அவதியுறும் நிலை உள்ளன.

இதனை கருத்தில் கொண்டு தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்கூடை அமைக்க தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் நிதியை ஒதுக்கீடு செய்து, அடிக்கல் நாட்டி, பணியை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், தருமபுரி நகராட்சி ஆணையாளர் சித்ரா, தருமபுரி நகர்மன்ற தலைவர் லட்சுமி, நகராட்சி பொறியாளர் ஜெயசீலன், பாமக துணைத்தலைவர் பி.சாந்தமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, மாவட்ட பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், மற்றும் மாவட்ட தேர்தல் பணிக்குழு தலைவர் நகர செயலாளர்கள், அதிமுக நகர கழக செயலாளர் பூக்கடை ரவி, உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டார்.

Tags:    

Similar News