உள்ளூர் செய்திகள்

கடலூர் கலெக்டர் அலுவலகம் முன் இலவச பட்டா கேட்டு தர்ணா போராட்டம்

Published On 2023-03-08 09:34 GMT   |   Update On 2023-03-08 09:34 GMT
  • கடலூர், மார்ச்.8- கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மந்தாரக்குப்பம் ஓம் சக்தி நகர் பகுதியை சேர்ந்த மலைக்குறவர் இன மக்கள் 30-க்கும் மேற்பட்டோர் நேரில் வந்தனர்.
  • திடீரென்று கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டனர் .

கடலூர்:

கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மந்தாரக்குப்பம் ஓம் சக்தி நகர் பகுதியை சேர்ந்த மலைக்குறவர் இன மக்கள் 30-க்கும் மேற்பட்டோர் நேரில் வந்தனர்.  பின்னர் திடீரென்று கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டனர் . இத்தகவல் அறிந்த கடலூர் புதுநகர் சப் -இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், எங்களை 2வருடங்களுக்கு முன்பு என்.எல்.சி நிர்வாகம் விரிவாக்க பணிக்காக காலி செய்தததை தொடர்ந்து எங்களுக்கு சிதம்பரம் தாலுக்கா காட்டுமன்னார்கோவில் வட்டம் கூடுவெளிச்சாவடி பகுதியில் இலவச பட்டா வழங்கினார்கள்.                                          

பட்டா வழங்கிய இடத்திற்கு நாங்கள் சென்றபோது அந்த ஊர் மக்கள் தடுத்து உள்ளே வரக்கூடாது எனக்கூறி தாக்க வந்தனர். இது குறித்து வருவாய் துறையினரிடம் புகார் அளித்த போது வருவாய்த் துறையினர் அதற்கு பதில் மாற்று இடம் தருவதாக உறுதியளித்ததால் மேற்படி பட்டாவை நீக்குவதற்கு அறிவுறுத்தப்பட்டது. அதன் பிறகு எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார்கள் இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதை தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News