உள்ளூர் செய்திகள்
தியாகதுருகம் அருகே இரு தரப்பினரிடையே தகராறு: 6 பேர் மீது வழக்குபதிவு
- அந்தப் பகுதியில் சூட்டிங் நடைபெற்றதாகவும் அப்போது வேன் வரும்போது வழியில் வாகனம் நிறுத்தி இருந்ததாகவும் கூறப்படுகிறது.
- இதில் ராணி மற்றும் சிவக்குமார் ஆகியோர் லேசான காயமடைந்தனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா மனைவி ராணி (வயது 45) சம்பவத்தன்று அந்தப் பகுதியில் சூட்டிங் நடைபெற்றதாகவும் அப்போது வேன் வரும்போது வழியில் வாகனம் நிறுத்தி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (40) என்பவர் கேட்டபோது இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் திட்டி தாக்கிக் கொண்டதாக தெரிகிறது. இதில் ராணி மற்றும் சிவக்குமார் ஆகியோர் லேசான காயமடைந்தனர்.
இதுகுறித்து ராணி கொடுத்த புகாரின் பேரில் சிவக்குமார் அவரது மனைவி செல்வி ஆகிய 2 பேர் மீதும், இதே போல் சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில் ராஜா அவரது மனைவி ராணி, மகள் சங்கீதா உறவினர் ஏழுமலை ஆகிய 4 பேர் மீதும் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.