சிறந்த நூலகர்களுக்கு டாக்டர் அரங்கநாதன் விருது வழங்கும் விழா
- கிளை நூலகம் மற்றும் ஊர்ப்புற நூலகங்களுக்கு தலா 4 கேடயங்கள் வழங்கப்பட்டது.
- முடிவில் பொது நூலகத்துறை இணை இயக்குனர் அமுதவல்லி நன்றி கூறினார்.
சீர்காழி:
நூலகத் தந்தை என போற்றப்படும் டாக்டர். எஸ்.ஆர். அரங்கநாதன் நினைவை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் சிறப்பாக சேவையாற்றும் நூலகர்களுக்கு டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருது வழங்கப்படுகிறது.
அதன்படி சீர்காழியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி தலைமை வகித்தார்.
பொது நூலக இயக்குனர் க.இளம்பகவத் வரவேற்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம்,சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.பன்னீர்செல்வம் (சீர்காழி), நிவேதா.எம்.முருகன் (பூம்புகார்), தாசில்தார் அர்ச்சனா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமாமகேஸ்வரிசங்கர், மாவட்ட கவுன்சிலர்கள் விஜ யேஸ்வரன், விஜயபாரதி, நகர்மன்ற தலைவர் துர்காரா ஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார்.
தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று இவ்வாண்டு சிறப்பாக சேவையாற்றிய 34 மாவட்டங்களை சேர்ந்த 34 நூலகர்களுக்கு அரங்கநாதன் விருது மற்றும் சான்றிதழ், வெள்ளி பதக்கம் மற்றும் ரூ.5ஆயிரம் காசோலை ஆகியவற்றை வழங்கினார்.
மேலும் மாநில அளவில் அதிக உறுப்பினர்கள், புரவலர்களை சேர்த்த மற்றும் அதிக நன்கொடைகள் பெற்ற மாவட்ட மைய நூலகம் முழு நேர கிளை நூலகம், கிளை நூலகம் மற்றும் ஊர் புற நூலகங்களுக்கு தலா நான்கு கேடயங்கள் விதம் 12 கேடயங்கள் வழங்கப்பட்டது.
மாநில அளவில் சிறப்பாக பங்காற்றிய 13 வாசகர் வட்ட தலைவர்களுக்கு நூலக ஆர்வலர்கள் விருது வழங்கி பேசுகையில்,
நூலகர்களுக்கு விருது வழங்கும் விழாவை ஏற்பாடு செய்யப்பட்டு அந்த விழாவினை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடத்த முடிவு செய்த பின் முதல்வரை சந்தித்து கூறிய பொழுது நூலகத் தந்தை பிறந்த ஊரான சீர்காழியிலே விழாவினை நடத்துவதுதான் பொருத்தமாக இருக்கும்.
எஸ். ஆர். அரங்கநாதன் 1974 இல் சென்னை பல்கலைக்கழகத்தில் நூலகராக பணியாற்றிய 20 ஆண்டுகள் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பணியாற்றிய பெருமை அவரையே சாரும்.
பள்ளிக்கல்வித்துறை 234/77 என சட்டமன்ற தொகு திகளில் ஆய்வுகள் மேற்கொ ள்ளப்பட்டுள்ளது.
கல்வித்துறை கடல் போன்றது இதுவரை 92 சட்டமன்ற தொகுதிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆசிரியர்களும், நூலகர்களும் இரு கண்கள் போல் என்று பேசினார்.
முடிவில் பொது நூலகத்துறை இணை இயக்குனர் அமுதவல்லி நன்றி கூறினார்.