உள்ளூர் செய்திகள்
எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு சரமாரி அடி-உதை
- எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளர்களை ஓ.பன்னீர்செல்வம் ஆட்கள் தடியால் சரமாரியாக அடித்து உதைத்தனர்.
- ரத்தம் சொட்ட சொட்ட நின்ற அவரை டாக்டர் சுனில் பாதுகாப்பாக அழைத்து சென்றார்.
சென்னை:
எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளரான எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில இணை செயலாளர் தி.நகர் டாக்டர்.சுனில் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமை கழகம் அருகே நின்று கொண்டிருந்தனர்.
அவர்களை ஓ.பன்னீர்செல்வம் ஆட்கள் தடியால் சரமாரியாக அடித்து உதைத்தனர். 5-க்கும் மேற்பட்டோர் தாக்கியதால் டாக்டர் சுனிலை காப்பாற்றுவதற்காக 133-வது வட்ட அம்மா பேரவை பொருளாளர் லோகநாதன் குறுக்கே வந்து தடுத்தார். அப்போது அவரையும் சரமாரியாக தாக்கினார்கள். கத்தியால் வெட்டினார்கள்.
இதில் லோகநாதன் தலையில் வெட்டு விழுந்தது. ரத்தம் சொட்ட சொட்ட நின்ற அவரை டாக்டர் சுனில் பாதுகாப்பாக அழைத்து சென்றார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்கள் ஏராளமானோர் திரண்டு வந்து தாக்கியதால் எடப்பாடி பழனிசாமியின் ஆட்கள் பலருக்கு அடி-உதை விழுந்தது.