உள்ளூர் செய்திகள்
நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை, பரிசு வழங்கப்பட்டது.
தேனி அருகே மாணவ-மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை
- தேனி மாவட்ட போயர் சமுதாயம் நலசங்கம் சார்பில் மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழங்கும் விழா தேனி அருகே வீரபாண்டியில் நடைபெற்றது
- நலச்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தேனி:
தேனி மாவட்ட போயர் சமுதாயம் நலசங்கம் சார்பில் 10-ம்வகுப்பு மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 2-ம் ஆண்டு கல்வி ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழங்கும் விழா தேனி அருகே வீரபாண்டியில் நடைபெற்றது.
இந்த விழாவில் சென்னை போயர் சமுதாய தொழிலதிபர் கூட்டமைப்பின் தலைவர் மாணிக்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கல்வி ஊக்கத்தொகை மற்றும் பரிசுகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ வீரர் முருகன், தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வக்கீல் பிரபாகரன், பிரபு, ராமசாமி, ராஜேஷ், லட்சுமணன், சிவராமன், ராம்செந்தில் மற்றும் நலச்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.