உள்ளூர் செய்திகள்

சேர்மன் அருணாசலசுவாமி.

ஏரல் சேர்மன் அருணாசலசுவாமி கோவில் ஆடி அமாவாசை திருவிழா-19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

Published On 2022-07-11 15:34 IST   |   Update On 2022-07-11 15:34:00 IST
  • விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடி அமாவாசை திருவிழா 10-ம் திருவிழாவான 28-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
  • 11-ந் தேதி திருவிழாவான வெள்ளிக்கிழமை வெள்ளை சாத்தி தரிசனம், அதன்பின்னர் பச்சை சாத்தி தரிசனம், அபிஷேகம் நடைபெறுகிறது.

ஏரல்:

ஏரல் சேர்மன் அருணாசலசுவாமி கோவில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது.

ஆடி அமாவாசை திருவிழா

விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடி அமாவாசை திருவிழா 10-ம் திருவிழாவான 28-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

இதையொட்டி அன்று பகல் 1 மணிக்கு சுவாமி உருகு பலகையில் கற்பூர விலாசம் வரும் காட்சி, சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது.

கற்பக பொன் சப்பரம்

தொடர்ந்து மாலை 5 மணிக்கு சுவாமி இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்ம திருக்கோலம், இரவு 11 மணிக்கு 1-ம் காலம் பூஜை, கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருளல், சுவாமி புறப்பட்டு சிறப்பு மேளதாளத்துடன் ஏரல் நகர் தரிசனம் அருளல் நடைபெறுகிறது.

11-ந் தேதி திருவிழாவான வெள்ளிக்கிழமை வெள்ளை சாத்தி தரிசனம், அதன்பின்னர் பச்சை சாத்தி தரிசனம், அபிஷேகம் நடைபெறுகிறது. 12-ம் திருவிழாவான சனிக்கிழமை சுவாமி தீர்த்தவாரி பொருநை நதியில் நீராடல், தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது. பின்னர் இரவு 9 மணிக்கு திருவருள் தரும் மங்கள தரிசனத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ. கருத்தப்பாண்டி நாடார் செய்து வருகிறார். 

Tags:    

Similar News