கொடைக்கானலில் மிளகு சீசன் தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி!
- கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளில் தற்போது மிளகு சீசன் தொடங்கியுள்ளது.
- திண்டுக்கல், மதுரை மற்றும் கேரளா போன்ற வெளிமாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலைப்பகுதியில் உள்ள பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, பூலத்தூர், மஞ்சள்பரப்பு, கொங்கப்பட்டி, புல்லா வெளி, குப்பம்மாள்பட்டி, மங்களம் கொம்பு, கே.சி.பட்டி, பெரியூர், பாச்சலூர், ஆடலூர், பன்றிமலை, சோலைக்காடு, போன்ற மலைப்பகுதிகளில் தற்போது மிளகு சீசன் தொடங்கியுள்ளன. தற்போது இங்கு விளையும் மிளகு விளைச்சல் குறைந்துள்ளது.
மார்ச் மாதம் தொடங்கி ஜூலை மாதத்தில் மிளகு சீசன் முடிவடையும். தற்போது கருப்பு மிளகு ரூ.470 முதல் ரூ.500 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. 1 கிலோ பச்சை மிளகு காம்புடன் ரூ.130 முதல் ரூ135 வரை விற்பனை செய்யப்படுகிறது. பச்சை மிளகு பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, கே.சி.பட்டி போன்ற கமிஷன் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
இப்பகுதியில் விளையும் மிளகு தரம் பிரித்து வியாபாரிகள் வாங்கி பட்டிவீரன்பட்டி, திண்டுக்கல், மதுரை, கேரளா, போன்ற வெளி மாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.