உள்ளூர் செய்திகள்
பெண் பூசாரி கொலை வழக்குகரும்பு வெட்டும் தொழிலாளி கைது
- கோவிலில் பூசாரியாக வேலை செய்து வந்தார்
- கரும்பு வெட்டும் தொழிலாளி
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த அலியாபாத்பாளையத்தை சேர்ந்த கணபதி மனைவி ஆனந்தாயி(73). இவர் அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூசாரியாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் பூஜைகள் முடிந்த பின்னர் கோவிலை பூட்டிவிட்டு கோவில் வளாகத்திலேயே ஆனந்தாயி படுத்து தூங்கினார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஆனந்தாயி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து ரிஷிவந்தியம்போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண் பூசாரியை கொன்றதாக காட்டுஎடையூர் பகுதியை சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளி அருளப்பன் மகன் அலெக்சாண்டரை (34) கைது செய்தனர்.