சாலையை ஆக்கிரமித்து கொடி கம்பங்கள்
- பல்வேறு கட்சியினர் கொடி கம்பங்களை நிறுவி உள்ளனர்.
- மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் இந்தியன் வங்கி பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதிகளுக்கு செல்லும் சாலையை ஆக்கிரமித்து அரசின் அனுமதி பெறாமல் பல்வேறு கட்சியினர் கொடி கம்பங்களை நிறுவி உள்ளனர்.
இதனால் இந்த சாலை மிகவும் குறுகலாகி விட்டன.இதனால் சாலையில் இரு சக்கர வாகனங்கள் மட்டுமே செல்லும் நிலை உள்ளது.மேலும் இந்த சாலையில் குப்பைகள் கொட்டியும் அசுத்தங்கள் செய்தும் மேலும் சிலர் சிறுநீர் கழித்தும் வருகின்றனர்.
இதனால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. அந்த வழியே செல்லும் குடியிருப்பு வாசிகள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே குப்பைகளை அகற்றவும் அசுத்தங்கள் செய்வோர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.