உள்ளூர் செய்திகள்
கடையநல்லூரில் பஸ் நிறுத்த நிழற்குடைக்கு அடிக்கல்
- மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நிழற்கூரை அமைக்கப்பட உள்ளது.
- கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ., மாணவர்களை அழைத்து அவர்கள் கைகளால் அடிக்கல்லை நாட்டினார்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் நகராட்சி பண்பொழி சாலையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பஸ் நிறுத்தம் அருகே மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் செலவில் நிழற்கூரை அமைக்கப்பட உள்ளது. அதன் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ., கல்லூரி மாணவர்களை அழைத்து மாணவர்களின் கைகளால் அடிக்கல்லை நாட்டினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட மாவட்ட துணை செயலாளர் பொய்கை மாரியப்பன், கடையநல்லூர் நகர செயலாளர் முருகன், முன்னாள் நகர செயலாளர் கிட்டு ராஜா, நகராட்சி உதவி பொறியாளர் கண்ணன், தொழில்நுட்ப பிரிவு உதவியாளர் சுரேஷ், அரசு ஒப்பந்ததாரர் வேல் துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.