திண்டிவனம் அடுத்த ஊரல் கிராமத்தில் இலவச பொது நல மருத்துவ முகாம் நடைபெற்றது.
திண்டிவனத்தில் இலவச பொதுநல மருத்துவ முகாம்
- ஊரல் கிராமத்தில் இலவச பொது நல மருத்துவ முகாம் நடைபெற்றது.
- இலவசமாக பரிசோதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு மாத்திரை,மருந்துகள் இலவசமாக. வழங்கப்பட்டது.
திண்டிவனம் நகரம் லயன் சங்கம் புதுச்சேரி மருத்துவ விஞ்ஞான கழகம் வெண்மணி, பட்டணம் ஆத்தூர் ஊராட்சி,ஊரல் ஊராட்சி ஆகியவை இணைந்து திண்டிவனம் அடுத்த ஊரல் கிராமத்தில் இலவச பொது நல மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் குழந்தைகள் சிறப்பு மருத்துவம்,எலும்பு முறிவு சிகிச்சை, மருத்துவம், பொது மருத்துவம் ,முகப்பேர் மருத்துவம், அறுவை சிகிச்சை மருத்துவம், சிறுநீரகவியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், கண் சிகிச்சை மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம் சர்க்கரை நோய் மருத்துவம் ஆகியவை இலவசமாக பரிசோதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு மாத்திரை,மருந்துகள் இலவசமாக. வழங்கப்பட்டது.
இந்த முகாமில் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 500 பேர் கலந்து கொண்டனர். இதில் இதற்கான ஏற்பாடுகளை ஊரல், பட்டணம், வெண்மணியாத்தூர், ஒன்றிய கவுன்சிலர் ஊரல் சிலம்பரசன், ஊரல் ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலை ஆகியோர் செய்து இருந்தனர்.லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.