தஞ்சையில் நாளை கால்நடை வளர்ப்பு இலவச பயிற்சி
- வருகிற 16-ந்தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
- காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பயிற்சி நடைபெறுகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சையில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் தஞ்சை கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு கால்நடை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி நடைபெற உள்ளது.
அதன்படி நாளை (செவ்வாய்க்கிழமை) வெள்ளாடு வளர்ப்பு குறித்தும், 16-ந்தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்தும், 23-ந்தேதி கறவை மாடு வளர்ப்பு குறித்தும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பயிற்சி நடைபெறுகிறது.
விருப்பம் உள்ளவர்கள் பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம். பயிற்சியில் பங்குபெற முன்பதிவு அவசியமில்லை. பயிற்சியில் பங்கு பெறுபவர்கள் ஆதார் நகலுடன் வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.