மாநில அளவிலான போட்டியில் காந்திகிராம பல்கலைக்கழக மாணவர்கள் சாதனை
- திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூயில் கடந்த நடைபெற்ற மாநில அளவிலான பொருளாதார விழாவில் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேர் கலந்து கொண்டனர்.
- வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சின்னாளபட்டி:
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூயில் கடந்த 19-ந்தேதி நடைபெற்ற மாநில அளவிலான பொருளாதார விழாவில் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக இளங்கலை பொருளியல்துறை மாணவர்கள் 11 பேர் கலந்து கொண்டனர்.
மேலும் இவ்விழாவில் நடைபெற்ற போட்டிகளில் காந்திகிராம பல்கலைக்கழக மாணவர்கள் வினாடி வினா, செவ்வியல் நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.
இதில் ஜெயசுருபா, மவுலீஸ்வரன் மற்றும் சக்தி ரேஷ்மா முதல் பரிசும், விஜயலட்சுமி ஆங்கிலக் கட்டுரை போட்டியில் 2-ம் பரிசும் வென்றனர். ஓட்டுமொத்த போட்டிகளில் காந்திகிராம பல்கலைக்கழகம் 2-ம் இடம் பெற்றது. பேராசிரியர்கள் சதீஸ்வரன், கொடியரசு ஆகியோர் மாணவர்களை இப்போட்டிகளுக்காக தயார் செய்து வழி நடத்தினர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு காந்திகிராம பல்கலைக்கழக பதிவாளர் சிவக்குமார், துறைத்தலைவர் நேரு, பேராசிரியர்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.