உள்ளூர் செய்திகள்
ரெட்டேரி சந்திப்பில் மெட்ரோ ரெயில் பணி- ராட்சத கிரேன் பாலத்தில் சரிந்தது
- மாதவரம் முதல் கோயம்பேடு வரை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான பணி நடந்து வருகிறது.
- கிரேன் சாய்ந்ததற்கான காரணம் குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொளத்தூர்:
மாதவரம் முதல் கோயம்பேடு வரை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான பணி நடந்து வருகிறது.
நேற்று நள்ளிரவு ரெட்டேரி சந்திப்பு அருகே வட மாநில தொழிலாளர்கள் 30 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது ராட்சத கிரேன் திடீரென சாய்ந்து அருகில் உள்ள பாலத்தின் மீது விழுந்தது. இதில் பாலத்தின் பக்கவாட்டு சுவர் லேசாக சேதம் அடைந்தது.
தகவல் அறிந்ததும் மெட்ரோ ரெயில் அதிகாரிகள், போலீசார் விரைந்து சென்று பாலத்தின் மீது சரிந்த கிரேன் பாகங்களை கழற்றி மீட்பு பணியில் ஈடுபட்டு சரி செய்தனர்.
கிரேன் சாய்ந்ததற்கான காரணம் குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கிரேன் பணியில் இருந்த ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.