ரிஷிவந்தியம் அருகே கார் மோதி சிறுமி பலி-தந்தை படுகாயம்
- சம்பவத்தன்று 2 பேரும் மோட்டார் சைக்கிளில் எறையூர் சாலை வழியாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
- தர்ஷினி சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த காட்டுசெல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 36), அவரது மகள் தர்ஷினி (4). சம்பவத்தன்று 2 பேரும் மோட்டார் சைக்கிளில் எறையூர் சாலை வழியாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது காட்டு செல்லூர் தனியார் பள்ளி அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே வேகமாக வந்த கார் ஆறுமுகம் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த தர்ஷினி சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த ஆறுமுகத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி தகவல் அறிந்து ரிஷிவந்தியம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தர்ஷினியின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து ஆறுமுகம் மனைவி உஷா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனர்.