உள்ளூர் செய்திகள்

கவர்னர் ஆர்.என்.ரவி நாளை திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் தரிசனம்

Published On 2025-02-26 11:28 IST   |   Update On 2025-02-26 11:28:00 IST
  • அய்யாவழி திருவிழாவில் நாளை மறுநாள் பங்கேற்கிறார்.
  • 2 நாட்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

நெல்லை:

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை (வியாழக்கிழமை) முதல் 2 நாட்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இதற்காக நாளை மாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வரும் கவர்னர், அங்கிருந்து காரில் திருச்செந்தூர் சென்று அய்யா வைகுண்டர் அவதார பதியில் சுவாமி தரிசனம் செய்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காரில் நெல்லைக்கு மாலை 6.30 மணிக்கு வந்தடைகிறார்.

அங்குள்ள தனியார் ஓட்டலில் தொழில் வர்த்தக சங்கத்தினர், வணிகர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடுகிறார். தொடர்ந்து அங்கிருந்து வண்ணார்பேட்டை அரசு சுற்றுலா மாளிகையில் இரவு ஓய்வெடுக்கிறார்.

நாளை மறுநாள் (28-ந்தேதி) காலை 10 மணிக்கு நெல்லை-குமரி நான்கு வழிச்சாலையில் நெல்லை அருகே செங்குளத்தில் உள்ள தனியார் மகாலில் நடைபெறும் அய்யா வைகுண்டர் அவதார திருவிழாவில் அவர் கலந்து கொள்கிறார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பகல் 12 மணிக்கு பாளை கே.டி.சி. நகரில் தனியார் மகாலில் பள்ளி மாணவ-மாணவிகளுடன் கலந்துரை யாடுகிறார்.

பின்னர் மாலை 3.30 மணி அளவில் தூத்துக்குடிக்கு புறப்படும் கவர்னர் ஆர்.என்.ரவி, அங்கிருந்து விமானத்தில் சென்னை திரும்புகிறார். அவரது 2 நாட்கள் சுற்றுப்பயணத்தை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இன்று முதலே பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் சிலம்பரசன், ஆல்பர்ட் ஜான் ஆகியோர் உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News