தமிழ்நாடு

மும்மொழிக் கொள்கைக்கு த.வெ.க. எதிர்ப்பு- What bro, its very wrong bro என தி.மு.க., பா.ஜ.க. வை கிண்டலடித்த விஜய்

Published On 2025-02-26 13:04 IST   |   Update On 2025-02-26 15:41:00 IST
  • நிதியை கொடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை.
  • எந்த மொழி வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்; அது தனிப்பட்ட உரிமை.

த.வெ.க. இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில், மக்கள் நலன் நாட்டின் நலன் எதைப்பற்றியும் கவலைப்படாமல், பணம், பணம் என்ற மனநிலை கொண்ட பண்ணையார்களை அகற்ற வேண்டும் என்று விஜய் பேசினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

* விரைவில் பூத் கமிட்டி மாநாடு நடத்தப்பட உள்ளது.

* பூத் ஏஜெண்டுகளை பலப்படுத்த வேண்டும்.

* த.வெ.க. தமிழகத்தில் முதன்மை சக்தி என்பது நிரூபணமாகும்.

* சாதாரண குடும்பத்திலிருந்து வந்தோர் அரசியலுக்கு வரக்கூடாதா?

* மும்மொழி கொள்கை என்ற புதிய பிரச்சனை கிளப்புகின்றனர்.

* கல்வி நிதியை மாநில அரசுக்கு தரமாட்டோம் என கூறுகின்றனர். எல்கேஜி, யூகேஜி பிள்ளைகள் போல் சண்டை போடுகின்றனர்.

* நிதியை கொடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. நிதிய பெற வேண்டியது தமிழக அரசின் கடமை.

* என்ன பிரச்சனை என்று தெரியாமல் சண்டையிடுவது போல் சண்டையிட்டு ஹேஷ்டேக் போட்டு விளையாடுகின்றனர்.

இவங்க இரண்டு பேரும் அடித்துக் கொள்வது போன்று அடித்துக்கொள்வார்களாம். இதை நாங்க நம்பணுமாம்

What bro, its very wrong bro என தி.மு.க., பா.ஜ.க. கட்சிகளை கிண்டலடித்த விஜய், தமிழ் மண் சுயமரியாதை கொண்ட மண். ஒரு மொழியை திணித்தால் எப்படி? என கேள்வி எழுப்பினார்.

மேலும், மாநில தன்னாட்சி உரிமைக்கு எதிராக மொழிக்கொள்கையை கேள்விக்குறியாக்கி வேறு மொழியை வலுக்கட்டாயமாக்க திணிப்பதா?

மாநில மொழி மீது வேறு ஒரு மொழியை அரசியல் ரீதியாக திணித்தால் எப்படி Bro?

எந்த மொழி வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்; அது தனிப்பட்ட உரிமை.

பொய் பிரசாரங்களை புறந்தள்ளிவிட்டு மும்மொழிக்கொள்கையை எதிர்ப்போம் என்றார்.

தொடர்ந்து Confident ஆக இருங்கள் வெற்றி நமதே என கூறி விஜய் உரையை முடித்துக்கொண்டார். 

Tags:    

Similar News