தமிழ்நாடு

லஞ்சம், வாரிசு அரசியல், ஊழல் - தி.மு.க.-வை விமர்சித்த பிரசாந்த் கிஷோர்

Published On 2025-02-26 12:40 IST   |   Update On 2025-02-26 12:40:00 IST
  • தமிழக வெற்றிக் கழகம் விஜய் தலைமையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
  • தமிழை கற்கவும், தமிழை பேசவும் அனைத்து முயற்சியும் எடுப்பேன்.

த.வெ.க. இரண்டாம் ஆண்டு தொடக்க விழா கூட்டத்தில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பேசியதாவது:-

* த.வெ.க.விற்கு வியூகம் அமைக்க போவதில்லை. இது மாற்றத்திற்கான காலம்.

* எனது வியூகம் தமிழக வெற்றிக் கழகத்திற்கும், சகோதரரும் நண்பருமான விஜய்க்கு தேவையில்லை.

* த.வெ.க. அரசியல் கட்சி அல்ல. பல லட்சம் பேர் இணைந்த இயக்கம்.

* விஜய் ஒரு தலைவர் மட்டுமல்ல, அவர் தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம்.

* தமிழக வெற்றிக் கழகம் விஜய் தலைமையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

* தமிழக வெற்றிக் கழகத்தில் அதிக இளைஞர்கள் உள்ளனர். உங்கள் பணியே உங்கள் வெற்றி.

* தமிழ்நாடு மற்றும் மேற்குவங்கம் தேர்தலுக்கு பின்னர் வியூகவகப்பாளர் பணியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தேன்.

* தமிழை கற்கவும், தமிழை பேசவும் அனைத்து முயற்சியும் எடுப்பேன்.

* தமிழகத்தின் வளர்ச்சி மாடல் இந்தியாவின் சிறந்த மாடல்.

* தமிழகத்தின் வளர்ச்சி மாடலை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்.

* அடுத்த வருடம் த.வெ.க. வென்ற பின்னர் உங்களில் பலர் சட்டசபையில் அமருவீர்கள்.

* தமிழக வெற்றிக் கழக வெற்றிக்கு நன்றி சொல்ல தமிழகம் வரும்போது தமிழில் பேசுவேன்.

* வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னணில் உள்ளது போல் அரசியல் ஊழலில் தமிழகம் மேலோங்கி உள்ளது.

* லஞ்சம், வாரிசு அரசியல் இல்லை என்றால் தமிழ்நாட்டின் வளர்ச்சி மேலும் சிறந்ததாக இருக்கும்.

* மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் தான் அரசியல் ஊழல் அதிகமாக உள்ளது.

* தமிழக மக்கள் மத அரசியலை வேரூன்ற விடமாட்டார்கள் என நம்புகிறேன்.

* சுனில் கவாஸ்கர், கபில்தேவ் மட்டுமே விளையாடிக்கொண்டிருந்தால், தோனி, சச்சினின் ஆட்டம் எப்படி மக்களுக்கு தெரியவரும் என்றார். 

Tags:    

Similar News