தமிழ்நாடு
null

தமிழர்கள் இந்தி கற்றுக்கொள்வதே புத்திசாலித்தனம் - ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு

Published On 2025-02-26 13:20 IST   |   Update On 2025-02-26 13:24:00 IST
  • தமிழ்நாட்டின் கிராமப்புறங்களை சேர்ந்த கிராமப்புற பொறியாளர்கள் நம்மிடம் உள்ளனர்.
  • தமிழ்நாட்டில் இந்தி கற்காதது எங்களுக்கு ஒரு பெரிய பாதகமாகும்.

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஏற்க மறுப்பதால் கல்விக்கான நிதி மறுக்கப்பட்டு வருகிறது. மும்மொழிக் கொள்கை இந்தி திணிப்பின் மறு வடிவம் என தமிழக அரசு வாதிடுகிறது.

முதலில் மூன்றாவதாக எந்த மொழியையும் கற்கலாம் என்று கூறிவிட்டு, அந்தந்த மொழிக்கான ஆசிரியர்கள் பற்றாக்குறையைக் காரணம் காட்டி இந்தி மொழி ஆசிரியர்களை மட்டுமே நியமித்து மாணவர்கள் இந்தி கற்கும் கட்டாயத்துக்கு தள்ளப்படுவார்கள் என்று விமர்சகர்கள் கணிக்கின்றனர்.

இந்நிலையில் தமிழர்கள் இந்தி கற்றுக்கொள்வதே புத்திசாலித்தனம் என சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

டெல்லி மற்றும் மும்பையில் பணிபுரியும் சோஹோ பொறியாளர்கள் மத்தியில் உரையாற்றிய ஸ்ரீதர் வேம்பு, "இந்தியாவில் சோஹோ வேகமாக வளர்ந்து வருகிறது. மும்பை மற்றும் டெல்லியில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றும் தமிழ்நாட்டின் கிராமப்புறங்களை சேர்ந்த கிராமப்புற பொறியாளர்கள் எங்களிடம்  உள்ளனர்.

நமது வணிகத்தின் பெரும்பகுதி டெல்லி, மும்பை மற்றும் குஜராத்திலிருந்து நடைபெறுகிறது. எனவே, வணிக வளர்ச்சிக்கு நாம் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் இந்தி கற்காதது எங்களுக்கு ஒரு பெரிய பாதகமாகும். இந்தி கற்றுக்கொள்வது அர்த்தமுள்ளதாக இருக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளில் நான் இந்தி கற்றுக்கொண்டேன். இப்போது இந்தியில் பேசப்படும் விஷயங்களில் சுமார் 20% என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது, தமிழ்நாட்டில் உள்ள பொறியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். 

Tags:    

Similar News