உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Published On 2022-07-22 10:52 IST   |   Update On 2022-07-22 10:52:00 IST
  • விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29-ந்தேதி கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது
  • கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம் என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூடத்தில் வருகிற 29-ந் தேதி காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.

அனைத்து துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண உள்ளனர். எனவே அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு வேளாண்மை, தோட்ட க்கலை,

வேளாண் கருவிகள், ஒழுங்குமுறை விற்பனை கூட நடவடிக்கைகள், கால்நடை பராமரிப்பு, பட்டுப்புழு வளர்ப்பு குறித்த கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம் என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News