உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தேனியில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

Published On 2023-10-21 10:47 IST   |   Update On 2023-10-21 10:47:00 IST
  • எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27-ஆம் தேதி மாலை 4 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட மன்றத்தில் நடைபெற உள்ளது.
  • எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

தேனி:

எரிவாயு நுகர்வோர்களுக்கு சிலிண்டர் வழங்குவதில் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் போன்ற குறைபாடுகளை களையும் பொருட்டு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் தேனி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முக வர்கள், எண்ணெய் நிறுவன மேலாளர்கள் மற்றும் எரிவாயு நுகர்வோர்கள் ஆகியோர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27-ஆம் தேதி மாலை 4 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட மன்றத்தில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கு எரிவாயு சிலிண்டர் வழங்குவதில் ஏற்படும் கால தாமதம் மற்றும் நுகர்வோர் குறைகளை பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதில் எரிவாயு முகவர்களின் மெத்தனப் போக்கு ஆகிய குறைபாடுகள் தொடர்பான புகார்களை பெற்று உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. எனவே எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News